என்டிடிவி நிறுவனம் ஆன் லைனில் ‘மிகச் சிறந்த 25 இந்தியர்கள்‘ என்ற கருத்துக் கணிப்பை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது. அதில் இந்தியாவின் வாழும் சாதனையாளர்கள் மற்றும் பிரபலங்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது. இதில் மிகச் சிறந்த 25 இந்தியர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தடுத்தனர். இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.  இதில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுக்கர், ஏ.ஆர்.ரகுமான், அமிதாப் பச்சன், ஷாரூக் கான்,  முகேஷ் அம்பானி,  மற்றும் தொழிலதிபர்கள், அறிஞர்கள் உட்பட 25 பேர் இடம்பெற்றிருந்தனர்.

மிகச்சிறந்த இந்தியர் விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார் .மேலும் இதில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று மாலை விருது வழங்கி கவுரவித்தார்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த நான், இவ்வளவு பெரிய விஐபிக்களின் நடுவில் இருக்கிறேன் என்றால் அது அற்புதமான விஷயம்தான். எனக்கு அம்மாவும் அப்பாவுமாக இருந்த எனது அண்ணன் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட், அடுத்து என் குரு பாலச்சந்தர் மற்றும் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

Leave a Reply