சென்னை வளசரவாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியில் செயற்குழு உறுபினர் பிரசாந்த் பூஷன், ‘தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி யாருடனும் கூட்டணி சேராது என்றும் தனித்தே 39 தொகுதிகளிலும் போட்டியிடும்’ என்று கூறினார். ஆம் ஆத்மி கட்சியுடன் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி கூட்டணி அமைக்கும் என எழுந்து வந்த வதந்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் நிறைந்த கட்சிகள் என்றும், ஊழலை தமிழ்நாடு உள்பட இந்தியாவில் இருந்தே விரட்டுவதுதான் ஆம் ஆத்மியின் கொள்கை என்றும் கூறிய அவர், இலங்கையில் நடந்த இனக்கொலையை ஐ.நா மன்றத்தில் பதிவு செய்யவும், தமிழக மீனவர்கள் சிங்கள படையினரால் தாக்கப்படுவதை தடுப்பதற்கும் ஆம் ஆத்மி பாடுபடும் என்று கூறினார்.

மேலும் நேற்றைய கூட்டத்தின் முடிவில் ஆம் ஆத்மியின் தமிழக பிரிவில் பொறுப்பாளர்களாக இருந்த கே.பி.ராராயணன், எம்.கிருஷ்ணமூர்த்தி, கே.பாலகிருஷ்ணன், நஸ்ரின் சஸ்தா மீனா, ஒய்.அருள்தாஸ் ஆகிய ஐந்து பேர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அவர் அதிரடியாக தெரிவித்தார். மேலும் பிரசாந்த் பூஷன் முன்னிலையில் பல இளைஞர்கள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply