சம்பவம் இருவரது சம்மதத்துடனேயே நடந்தது என தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 7-8 தேதிகளில் கோவாவில் தெஹெல்கா இதழ் நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர விடுதியில் நடந்தது. அப்போது, விடுதியில் இருந்த லிஃப்டுக்குள் தேஜ்பால் பெண் நிருபரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான புகார்.
விசாரணைக்கு தேஜ்பால் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பதாகக் காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இருப்பினும், பெண்ணிடம் பாலியல் ரீதியாக தாம் அத்துமீறி நடக்கவில்லை என்பதை தேஜ்பால் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply