நூற்றுக்கணக்கான உயிரை காப்பாற்றியவர் தேர்தல் களத்தில்!

சமீபத்தில் திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உரிய நேரத்தில் மக்களை காப்பாற்றிய தனியரசு என்பவருக்கு உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனியரசு சேவையை பாராட்டி குடியரசு தின விழாவின்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் இவருக்கு விருது வழங்கிய நிலையில் சென்னை திருவொற்றியூர் 10வது வார்டில் போட்டியிட உள்ளார். அவர் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.