shadow

வங்க மொழியிலும் பட்டைய கிளப்பிய 'தனி ஒருவன்' வசூல்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'தனி ஒருவன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படம் ராம்சரண் தேஜா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் இந்த படம் வங்காள மொழியில் ரீமேக்காகி அங்கும் வெற்றி பெற்றுள்ளது.

பொதுவாக வங்காளத்தில் கமர்ஷியல் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்காது. ஆர்ட் பிலிம்கள் மட்டுமே அங்கு விரும்பி பார்க்கப்படும் இந்த நிலையில் 'தனி ஒருவன்' ரீமேக் படத்திற்கு வங்காள மக்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். இதுவரை வெளிவந்த ரீமேக் படங்களிலேயே ‘தனி ஒருவன்’ ரீமேக்தான் அதிகமாக வசூலித்து ரிக்கார்ட் பிரேக் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

‘ஒன்’ என்ற பெயரில் ரீமேக் ஆன இந்த படத்தை பிஸ்ரா தாஸ்குப்தா இயக்கினார். தமிழில் ஜெயம்ரவி நடித்த கேரக்ரில் யாஷ்தாஸ் குப்தா நடித்துள்ளார், அரவிந்த்சாமி கேரக்டரில் ப்ரோசன்ஜித் சட்டர்ஜி நடித்துள்ளார், நயன்தாரா கேரக்டரில் நுஸ்ரத் ஜஹான் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான இந்தப் படம் வங்காளத்தில் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது பெங்காளி மக்கள் வசிக்கும் திரிபுரா, அஸ்ஸாம், ஜார்கண்ட் மாநிலத்திலும் வெற்றிகரகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply