தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையும் பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையும், இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply