shadow

திமுக தலைவர் ஸ்டாலின், நட்பு, நன்றியை மறக்க கூடாது: தம்பிதுரை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் இறுதி விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி உள்பட திமுக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விழாவில் திமுக கலந்து கொள்ளாது என திமுக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை, ‘தி.மு.க. ஆட்சிக்கு வர அரும்பாடுபட்டவரும், கருணாநிதியை முதலமைச்சராக்கியவருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்ப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எம்.ஜி.ஆரின் கடமை, நட்பு மற்றும் தொண்டை மறக்கக் கூடாது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பவில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ,

Leave a Reply