shadow

‘விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல காமெடியன்
vijay 6
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள செட் ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சதீஷ் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு காமெடி நடிகரான தம்பி ராமையாவும் தற்போது இணைந்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் தாய்மாமனாக தம்பி ராமையா நடித்து வருவதாகவும் விஜய்-கீர்த்திசுரேஷ் காதலை சேர்த்து வைப்பதே இவர்தான் என்றும் இந்த படத்தில் தன்னுடைய வழக்கமான காமெடி நடிப்பை தவிர்த்து வித்தியாசமான முறையை அவர் முயற்சி செய்துள்ளதாகவும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு நிச்சயம் பாராட்டும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கி வருகிறார்.

Chennai Today News: Thambi Ramaiya once agains joined Vijay

Leave a Reply