shadow

‘விசுவாசம்’ படத்தில் வீரம், வேதாளம் பட நடிகர் இணைப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் வாரம் முதல் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் அஜித், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட ஒருசில நடிகர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் தம்பி ராமையா இணைந்துள்ளார். ஏற்கனவே அஜித்-சிவா கூட்டணியில் உருவான வீரம், வேதாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக சென்னை அருகே உள்ள பின்னிமில்லில் கிராமம் போன்ற செட் போடப்பட்டு வருவதாகவும், இந்த படத்தில் அஜித், வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை காஸ்ட்யூமில் ஒரு கிராமத்து பெரிய மனிதர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply