shadow

தாமரை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள்! தொண்டர்கள் ஏற்பார்களா?

அதிமுகவின் இரு அணிகளின் தலைவர்களை மாறி மாறி சந்தித்து வரும் பிரதமர், இருவரையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்ற வேண்டும் என்று நினைக்கின்றாராம். அதே நேரம் இருவரும் பாஜகவுக்கு கட்டுப்பட்டுத்தன் நடக்க வேண்டும் என்பதும் அவருடைய எண்ணமாம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 2.8% வாக்குகள் மட்டுமே பெற்ற பாஜக தனித்து நின்று தமிழகத்தில் ஜெயிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டது. எனவே அதிமுகவுடன் கூட்டு என்பதுதான் அதன் தற்போதைய நிலை. ஆனால் இரண்டாக பிரிந்து கிடக்கும் அதிமுகவின் இரு அணிகளில் ஏதாவது ஒரு அணியை இணைத்து கொள்ள பாஜக மேலிடம் விரும்பவில்லை.

எனவே இரு அணிகளுடனும் தொகுதி உடன்பாடு அல்லது ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டு என்பதுதான் பாஜகவின் முடிவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘இரட்டை இலைச் சின்னம் இல்லாததால், சுயேச்சை சின்னத்தில் நிற்பதைவிட, எல்லோருக்கும் தெரிந்த சின்னமான தாமரை சின்னத்தை இரவலாகப் பெற்று நிற்கிறோம்’ என்கிற அறிவிப்பை இரண்டு அணிகளுக்கும் பாஜக ஆலோசனை தெரிவிக்கும் என்றும், மத்திய அரசின் அழுத்ததால் இரு அணிகளும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக தொண்டர்கள் இதை ஏற்று கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Leave a Reply