சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கவிஞர் தாமரை இசையமைபாளர் தேவிஸ்ரீ பிரசாத் மீது பகிரங்க புகார் தெரிவித்ததால் விழா மேடை பரபரப்பு ஆனது.

கவிஞர் தாமரை எந்த ஒரு படத்திற்கும் அனைத்து பாடல்களையும் எழுத வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஒப்புக்கொள்வார். ஆனால் பிரம்மன் படத்திற்காக சசிகுமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பாடலை மட்டும் எழுத சம்மதித்தார். ஆனால் அந்த ஒரு பாடலிலும், தாமரை எழுதிக்கொடுத்த பல்லவிக்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் தானே எழுதிய டம்மி பல்லவியை ஒலிப்பதிவு செய்துவிட்டாராம்.

இந்த விஷயம் தாமரைக்கு பாடல் வெளியீட்டு விழாவின்போது தான் தெரியவந்தது. அதனால் மேடையில் பேசும்போது, ” நான் எழுதும் பாடல் வரிகளில் வேறொருவரின் வரிகளை இணைப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்றும், எனது பாடலின் வரிகள் முழுவதுமே எனக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

விழா மேடையில் வெளிப்படையாக இந்த புகாரை தாமரை கூறியதால் சிறிது நேரம் பரபரப்பானது.

Leave a Reply