shadow

தல அஜித்தின் படத்திற்கு இசையமைக்கும் தமன்

ajith-57தல அஜித் நடித்து வரும் ‘தல 67’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘வேதாளம்’ படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தில் அஜித் நடித்த வேடத்தில் பவன்கல்யாண் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க தமன் ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத்துக்கு இணையாக தமன் இசையமைப்பாரா? ஆலுமா டோலுமா ஸ்டைலில் தமன் போடும் குத்துப்பாட்டு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தை இயக்கிய ஆர்.டி.நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை ‘வேதாளம்’ படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply