shadow

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 3 தொடங்கியுள்ளது.

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.