shadow

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை ஜீடிவி நிறுவனம் வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை ரூ.100 கொடுத்து வாங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்