1991ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மம்முட்டி நடித்து மணிரத்னம் இயக்கிய “தளபதி”,  தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய திரைப்படம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மணிரத்னம் தற்போது இயக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை மணிரத்னம் தரப்பு உறுதி செய்யவில்லை.

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதிஹாசன் ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த படம் “தளபதி” படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. ரஜினி வேடத்தில் மகேஷ்பாபுவும், மம்முட்டி வேடத்தில் நாககர்ஜுனாவும் நடிக்க இருப்பதாக தெலுங்கு படவுலகில் செய்திகள் கசிந்து வருகின்றன. ஆனால் இந்த தகவல்களை மணிரத்னம் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,

மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், வழக்கம்போல் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. தமிழில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களை தேர்வு செய்ய மணிரத்னம் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.

Leave a Reply