எம்ஜிஆர் உயிரோடு வந்துட்டாரா? ‘தலைவி’ பர்ஸ்ட்லுக்கின் ஆச்சரியம்

எம்ஜிஆர் உயிரோடு வந்துட்டாரா? ‘தலைவி’ பர்ஸ்ட்லுக்கின் ஆச்சரியம்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் எம்ஜிஆரின் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்போது எம்ஜிஆர் கெட்டப்பில் அரவிந்தசாமி நடித்த புகைப்படங்களை ’தலைவி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

எம்ஜிஆரை மீண்டும் உயிரோடு பார்ப்பது போல இருப்பதாக இந்த புகைப்படங்களை பார்த்த எம்ஜிஆரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார் என்பதும், இன்று எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி எம்ஜிஆர் கேரக்டரின் புகைப்படங்கள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply