shadow

மாஸ் குத்துப்பாட்டை வரவேற்க தயாராகும் தல ரசிகர்கள்

தல அஜித் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும்

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு தேவையான இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் டி.இமான் முடித்து கொடுத்துவிட்டாராம். அதில் ஒன்று மாஸ் குத்துப்பாட்டு ஒன்றும் இன்னொன்று தன்னுடைய ஸ்டைலில் அமைந்த மெலடி பாடல் என்றும் இமான் கூறியுள்ளார்.

மேலும் இந்த மாஸ் குத்துப்பாட்டை படப்பிடிப்பு ஆரம்பித்த ஒருசில நாட்களில் சிங்கிள் பாடலாக ரிலீஸ் செய்ய படகுழுவினர் முடிவு செய்துள்ளதால் இந்த பாட்டை வரவேற்க தல ரசிகர்கள் தற்போது முதலே தயாராக உள்ளனர்.

Leave a Reply