பல்கேரியாவை சென்னைக்கு கொண்டு வந்த ‘தல 57’ இயக்குனர்

பல்கேரியாவை சென்னைக்கு கொண்டு வந்த ‘தல 57’ இயக்குனர்

அஜித்தின் ‘தல 57’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோ ஆகிய பகுதிகளில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் பல்கேரியா செல்ல சிறுத்தை சிவா முடிவு செய்திருந்தார்

ஆனால் அதற்கு முன்னர் பல்கேரியாவில் நடைபெறும் இண்டோர் காட்சிகளின் படப்பிடிப்பை சென்னையிலேயே செட் போட்டு நடத்த சிவா திட்டமிட்டதாகவும், அதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் சென்னை பின்னி மில்லில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படப்பிடிப்பை அடுத்து அஜித், காஜல் அகர்வால் உள்பட அனைவரும் பல்கேரியாவுக்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த படத்திற்கு ‘வதம்’ அல்லது ‘வியூகம்’ என்ற டைட்டிலை வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply