தாய்லாந்து நாட்டில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நேற்று பொது தேர்தல் நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களை தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். முன்னதாக எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிக்க கோரியதை பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறிவருகின்றன.
வாக்குகள் எண்ணும் பணி முடிந்து, இன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.