தாய்லாந்து நாட்டில் பிரதமர் யிங்லுக் ஷ்னவத்ரா பதவி விலக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் தொடர்ந்து வலுத்து வருவதால் அங்கு பல நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தாய்லாந்து நாட்டில் பதட்டம் அதிகரித்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஷினவத்ரா, தனது சகோதரரும், முன்னாள் பிரதமருமான தக்ஷின் ஷினவத்ராவின் கட்டளைப்படி ஆட்சி புரிவதாகவும், அவர் சொந்தமாக எந்த முடிவும் எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டி, அவர் பதவி விலக வேண்டுமென அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், பல சமூக இயக்கங்களும் தீவிரமாக போராட்டம் செய்து வருகின்றன. இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வலுத்து வருவதால் போராட்டத்தை கட்டுப்படுத்த தாய்லாந்து அரசு அடுத்து வரும் 60 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளது. இதனால் 60 நாட்களுக்கு அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த நெருக்கடி நிலைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply