மீண்டும் தை 1ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டா?

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என மாற்றிய நிலையில் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என அறிவித்தது

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பு வெளியிட உள்ளதாக தெரிகிறது.

பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடை அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச பொருள்கள் கொண்ட துணிப்பையில் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்டுள்ளது.

எனவே விரைவில் மீண்டும் தமிழ் புத்தாண்டு தை 1ஆம் தேதி தான் என தமிழக அரசு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.