தமிழ்ப்புத்தாண்டு ரேசில் இடம்பிடித்துவிட்ட அருண்விஜய் திரைப்படம்

தமிழ்ப்புத்தாண்டு ரேசில் இடம்பிடித்துவிட்ட அருண்விஜய் திரைப்படம்

அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கியுள்ள ‘தடம்’ திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான “தடையறத்தாக்க” பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் “தடம்” படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது. இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் “தடம்” தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், “தடம்” படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும், அருண்ராஜ் இசையும் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.