shadow

கருணாநிதியை சந்தித்த மேலும் 2 முக்கிய தலைவர்கள்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி இருப்பதால் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார். அவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல தலைவர்கள் சந்தித்து வரும் நிலையில் இன்று அவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த சந்திப்பின்போது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் இந்த சந்திப்பு திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply