டோல்கேட் பணியாளரை அடித்து உதைத்த எம்.எல்.ஏவின் கணவர்: பெரும் பரபரப்பு

டோல்கேட் பணியாளரை அடித்து உதைத்த எம்.எல்.ஏவின் கணவர்: பெரும் பரபரப்பு

தெலுங்கானா மாநிலத்தில் பெண் எம்.எல்.ஏ ஒருவரின் கணவர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பவரி அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏல் போடிகா சோபா. இவர் தனது கணவர் மற்றும் பாதுகாவலர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள திம்மாபூர் டோல்கேட்டில் கட்டணம் கேட்டனர். எம்.எல்.ஏ காருக்கே கட்டணமா? என்று ஆத்திரம் அடைந்து எம்.எல்.ஏ சோபாவின் கணவர் மற்றும் பாதுகாவலர்கள் கட்டணம் வசூல் செய்யும் நபரை அடித்து உதைத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது..

இந்த அடிதடி சம்பவம் நடந்தபோது எம்.எல்.ஏ அருகில் இருந்ததாகவும், இந்த சம்பவம் முழுவதும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply