அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்த மூன்று பேர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி பாதுகாப்பாக வெளியே வந்துவிட்டனர். ஆனால் தீயணைப்பு படையினர்களுக்கு தகவல் கொடுக்க அவர்களிடம் செல்போன் இல்லை. தீவிபத்தில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் அவர்கள் மூவரும் தங்களுடைய மொபை போனை வீட்டுக்கு உள்ளேயே வைத்துவிட்டனர்.

மூவரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவார். எனவே தீவிபத்து ஏற்பட்டுள்ள வீட்டுக்குள் புகுந்து தங்கள் மொபைல் போன்களை மட்டும் எடுத்துவிட்டு வெளியே வந்துவிடலாம் என இரண்டு ஆண்களும் முடிவு செய்து தீ எரிந்து கொண்டிருக்கும் வீட்டிற்குள் சென்றார்கள். ஆனால் அவ்வாறு சென்றவர்களில் ஒருவர் பரிதாபமாக தீக்கிரைக்கு இரையாகி பலியானார். இந்த சோக சம்பவத்தால் அந்த பகுதியே அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதன்பின்னர் தீயணைப்படையினர் வந்து தீயை அணைத்து பலியானவரின் உடலையும் கைப்பற்றினர். மொபைல் போனால் ஒரு உயிர் பலிபோனதை நினைத்து அவருடன் இருந்தவர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

Leave a Reply