மூன்றாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியின் முடிவில், நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் ஹாமில்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 367 ரன்கள், நியூசிலாந்து 349 ரன்கள் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 122 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-0 என கைப்பற்றியது.

Leave a Reply