பாகிஸ்தானில் செயல்படும் அசாடி(ஜம்மு, காஷ்மீர்) இயக்க தலைவராக இருந்தவர் ஹபீப் சைபுல்லா மன்சூர். இவர் ஜமாத்டாவா இயக்கத்தின் தலைவர் ஹபிஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார், அந்த இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினராகவும் இருந்தவர். இந்த சயீத் தான் மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹபிஸ் சைபுல்லா மன்சூர் காரில் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென்று சறுக்கி சென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஹபிஸ் சைபுல்லா மன்சூர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கார் டிரைவர், பாதுகாவலர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

Leave a Reply