ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மத்திய ரயில் நிலையத்தின் மிக அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்து காரணமாக புல்லட் ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்ய வந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ ரயில் நிலையத்தின் அருகேயுள்ள ஒரு வணிக வளாகட்தின் நேற்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அருகிலுல்ள மூன்று கட்டிடங்களுக்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் பெரும்புகை ஏற்பட்டது. இந்த புகை காரணமாக ரயில் போக்குவரத்து சேவை முடங்கியது. டோக்கியோவையும், நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் சேவை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் அவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஆறு மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply