பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி உள்ளவர்கள் யார் யார்?

booster-vaccine

ஒமிம்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் அல்லது முப்பத்தொன்பது வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த தகுதியானவர்கள்.

மேலும் முதல் இரண்டு தவணை தடுப்பூசி கோவாக்சின் எனில் அதையே பூஸ்டர் தடுப்பூசி ஆக செலுத்த வேண்டும்.

கோவிஷீல்டு என்றால் அதையே பூஸ்டர் தடுப்பூசி ஆக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது