சென்னையில் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் 2014 ஜனவரி 5ஆம் தேதி வரை சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த போட்டிக்கு டிக்கெட் விற்பனை மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாக  நடப்பு சாம்பியனான செர்பிய நாட்டை சேர்ந்த ஜாங்கோ டிப்சரேவிச் திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலக நேரிட்டதாகவும், சென்னை ஓபன் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தான் மிகவும் வருந்துவதாகவும், அதற்காக டென்னிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜாங்கோ டிப்சரேவிச், கடந்த ஆண்டு, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பாவ்டிஸ்டா அகுத் என்ற வீரரை இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply