ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவுக்கான ஏடிபி தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முதல் இடம் பிடித்துள்ளார். நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 7வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.
ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) 3வது இடத்தில் நீடிக்கிறார். இரட்டையர் பிரிவில் அமெரிக்க சகோதரர்கள் பாப் பிரையன் , மைக் பிரையன் ஜோடி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் லியாண்டர் பயஸ் , ரேடக் ஸ்டெபானக் (செக்.) 4வது இடத்தில் உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.