மக்களவையில் நிறைவேறிய தெலுங்கானா மசோதா, நேற்று இரவு மாநிலங்களவையில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது. இதையடுத்து நாட்டின் 29 வது மாநிலமாக தெலுங்கானா உதயமாகிறது.
நேற்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மாநிலங்களவையில் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்தார். சீமாந்திர பகுதி எம்.பிக்களும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் மசோதாவிற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே தெலுங்கானா மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா, சில திருத்தங்கள் செய்தவுடன் ஆதரவு அளிக்க முன்வந்ததால், தெலுங்கானா மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்ஸிட் மற்றும் திமுக எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தெலுங்கானா மசோதா நிறைவேறியதை தொடர்ந்து தெலுங்கா பகுதி மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.