தெலுங்கானா என்கவுண்டர்: ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவால் காவல்துறை அதிர்ச்சி!

சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து குற்றவாளிகள் நால்வரும் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப் பட்டனர். இந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மறு உத்தரவு வரும்வரை என்கவுண்டர் செய்யப்பட்ட நால்வரின் பிரேதங்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று மீண்டும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது என்கவுண்டரில் கொல்லப்பட்ட நால்வருக்கும் மறு பிரேத பரிசோதனை செய்ய தெலுங்கானா உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் போலீசார் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply