ஸ்டாலினை சந்திக்கின்றார் தெலுங்கானா முதல்வர்: தேசிய அளவில் கூட்டணிக்கு முயற்சி

ஸ்டாலினை சந்திக்கின்றார் தெலுங்கானா முதல்வர்: தேசிய அளவில் கூட்டணிக்கு முயற்சி

காங்கிரஸ், பாஜக அல்லாத தேசிய அளவிலான கூட்டணி ஒன்றை அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மம்தாவின் இந்த முயற்சிக்கு சமீபத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். மம்தாவும் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், நாளை சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

அந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதன் பின்னர் ஸ்டாலினையும் சந்தித்து தேசிய அளவிலான கூட்டணி குறித்து ஆலோசனன செய்யவுள்ளார்.

தெலுங்கானா, சந்திரசேகரராவ், ஸ்டாலின், மம்தா, தேசிய கூட்டணி

Leave a Reply

Your email address will not be published.