shadow

தெலுங்கானா உதயமான நாளில் முதல்வர் அறிவித்த சிறப்பு பரிசு

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்து தனி மாநிலமான உதயமான நாளில் மாநிலம் முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாகியது இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவின் முதல் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் உதயமான 4-வது ஆண்டு தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் மாநில விவசாயிகளுக்கு சிறப்பு திட்டமாக ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். எல்.ஐ.சி.யுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கான பிரிமியத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் இந்த திட்டத்தில் இணைக்கப்படும் விவசாயி இறந்து விட்டால், 10 நாட்களுக்குள் அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்

Leave a Reply