படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை நிறுத்துங்கள்:

ஆர்.கே.செல்வமணி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு நேற்று அதிரடியாக அறிவித்தது

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்பை உடனடியாக நிறுத்துமாறு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் சின்னத்திரை தயாரிப்பாளர்களை கேட்டு கொண்டார்.

படப்பிடிப்பு மட்டுமின்றி போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளையும் நிறுத்துமாறு ஆர்கே செல்வமணி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக புதிய தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாவது தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply