அதிர்ச்சியில் பொதுமக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்த நிலையில் திடீரென தெலுங்கானா அரசு அதற்கு மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது அம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தெலங்கானாவில் மே-07 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படும் என்றும், கொரோனா எதிரொலியாக தெலங்கானாவில் மே-07 ஆம் தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்போவதாகவும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். எனவே தெலுங்கானாவில் மட்டுமே மேலும் 4 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மே 7ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்தவித தளர்வும் இல்லை என்றும் ஊரடங்கு விதிக்கான அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்படும் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *