கோழி தான் முட்டையிடும், சிறுவன் முட்டையிடுவதை கேள்விப்பட்டதுண்டா?

கோழி தான் முட்டையிடும், சிறுவன் முட்டையிடுவதை கேள்விப்பட்டதுண்டா?

முட்டையிடும் கோழி போல இந்தோனேசியாவில் ஒரு சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ள சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் குவாபகுதி என்ற பகுதியைச் சேர்ந்த அக்மல் என்ற 14 வயதுடைய சிறுவன், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கோழி போன்று முட்டையிட்டு வருவதாக அவனது பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து அக்மலின் தந்தை கூறியபோது, ‘அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முட்டையிட்டு வருகிறான், இதுகுறித்து நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம்.

தற்போது கூட மருத்துவமனைக்கு வந்த பின் அவன் இரண்டு முட்டைகள் போட்டான். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முட்டையிட்டிருக்கிறான், அதை நான் உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினார், மாணவன் தொடர்பான எக்ஸ்-ரே புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஆனால் மருத்துவர்களோ இது நிச்சயமாக இருக்க முடியாது, மனிதன் உடலில் முட்டை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, மருத்துவமனையில் முட்டை போட்டதாக கூறுகின்றனர். நாங்கள் அதை நேரடியாக பார்க்கவே இல்லை என்று கூறுகின்றனர். மேலும் மருத்துவர்கள் மாணவனை முழுமையாக பரிசோதித்து வருவதாக அங்கிருக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.