என்னென்ன கடைகளைத் திறக்கலாம்? முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் இந்த நிலையில் தற்போது மேலும் சில தகவல்களை அறிவித்துள்ளார் அது குறித்து தற்போது பார்ப்போம்

தமிழகத்தில் சென்னையை தவிர பிற இடங்களில் மே 11 ஆம் தேதி முதல் டீ கடைகளை திறக்கலாம். பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

தமிழகம் முழுவதும் மே 11 முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். சென்னையில் பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படலாம். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்.

சென்னையில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

Leave a Reply