சென்னை டிசிஎஸ் நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலையில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் அனைவரும் பிடிபடுவார்கள் என்றும் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் காவல்துறை அதிகாரி மஞ்சுநாதா தெரிவித்தார்.

சென்னை டிசிஎஸ் ஊழியர் உமா மகேஸ்வரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அலுவலகத்தில் கிளம்பிய பின்னர், அவர் கடத்தி கொலை செய்யப்பட்டு சிறுசேரியில் இருக்கும் புதர் மறைவில் அவரது உடல் வீசப்பட்டுள்ளது. இதனால் டிசிஎஸ் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போலீஸ் அதிகாரிகளின் விசாரணையில் உமா இருந்த புதர் அருகே சிகரெட் துண்டுகள் ,மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் உமாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், எஸ்.எம்.எஸ்கள் ,மற்றும் இமெயில்கள் ஆகியவற்றை ஆராய்ந்ததில் சில முக்கிய தடயங்கள் சிக்கின. இதை வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் சில குற்றவாளிகளை போலீஸ் நெருங்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply