உலகின் சக்தி வாய்ந்த ஐ.டி. பிராண்ட் நிறுவனமாக டி.சி.எஸ் தேர்வு
உலகின் சக்தி வாய்ந்த ஐ.டி. பிராண்ட் நிறுவனமாக இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டி.சி.எஸ். தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பெருமை அடைந்துள்ளனர்.
பிராண்ட் பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் பட்டியல் ஒன்றை கடந்த சில வாரங்களாக தயாரித்து வந்தது. அதன்படி உலகின் சக்தி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை தயாரித்து இன்று வெளியிட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கான இந்த தரப்பட்டியலில் ஐ.டி. துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டி.சி.எஸ். நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டி.சி.எஸ். நிறுவனம் 78.3 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதம் மற்றும் பணியாளர்களின் மனநிறைவு ஆகிய விஷயங்களில் டி.சி.எஸ். நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று பிராண்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2016-ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிஸ்னி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதிப்புமிக்க பிராண்டாக ஆப்பிள் தேர்வாகியுள்ளது.
Chennai Today News:TCS Rated World’s Most Powerful Brand in IT Services: Report
Leave a Reply
You must be logged in to post a comment.