பிஸ்லெரி நிறுவனத்தை வாங்குகிறார் ரத்தன் டாடா: இத்தனை ஆயிரம் கோடியா?

பிஸ்லெரி நிறுவனத்தை வாங்குகிறார் ரத்தன் டாடா: இத்தனை ஆயிரம் கோடியா?

பிரபலமான நிறுவனமான ‘பிஸ்லெரி’ நிறுவனத்தை ரத்தன் டாடா வாங்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன.

‘பிஸ்லெரி’ வாட்டர் பாட்டில் நிறுவனத்தை டாடா குழுமம் ரூபாய் 7000 கோடிக்கு வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ‘பிஸ்லெரி’ நிறுவனத்தின் தலைவர் செளஹான் கூறியபோது தனது நிறுவனத்தை தனக்குப் பிறகு தனது மகள் நடத்த விருப்பம் இல்லை என கூறியதாகவும், அதனால் இந்த நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ், டாடா உள்பட ஒரு சில நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் 7000 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது