டாஸ்மார்க் விவகாரம்

 உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு

டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்ட தால் இந்த உத்தரவு பிறப்பிக்கவும் நேற்று உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து இருந்தது

இதனை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் பின்பற்ற படுவதாகவும் டாஸ்மாக் கடைகளை எங்கே நடத்துவது எப்படி நடத்துவது போன்ற நிபந்தனைகளை விதிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்றும் அரசு எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் மேல்முறையீட்டு மனுவில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

டாஸ்மார்க் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply