இன்று காலை சென்னையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சசிபெருமாள் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள சமூக ஆர்வலர் சசிபெருமாள் கடந்த ஆண்டு சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி உண்ணாவிரத்ததை வாபஸ் பெற்றார். ஆனால் ஒராண்டுக்கு மேல் ஆகியும் டாஸ்மாக் கடைகள் மூடாததை கண்டித்து இன்று காலை 7 மணியளவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி பின்புறம் ஹாரிங்டன் சாலையில் உள்ள டாஸ்மாக் 447 என்ற கடைக்கு முன் திடீரென உண்ணாவிரதம் இருந்தார்.”

சசிபெருமாளின் திடீர் உண்ணாவிரதத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சசிபெருமாளை கைது செய்தனர். இம்முறை இந்த பிரச்சனையை நான் சாதாரணமாக விடப்போவதில்லை என்றும் டாஸ்மாக் கடைகளை மூடும்வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறினார்.

Leave a Reply