இன்று முழு ஊரடங்கு: நேற்றை ஜரூராக விற்பனையான டாஸ்மாக் மது, இறைச்சி!

இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று டாஸ்மாக் மது வகைகள் மற்றும் இறைச்சிகளை பொதுமக்கள் வாங்கி குவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் மதுக் கடைகள் உள்பட எந்த கடைகளும் இன்று திறக்கக்கூடாது.
இந்த நிலையில் நேற்று மாலை முதலே டாஸ்மாக் மது வகைகளை குடிமகன்கள் வாங்கி குவித்தனர்.

அதேபோல் காய்கறிகளையும் பொதுமக்கள் நேற்று மாலை அதிக அளவில் வாங்கி குவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தனிமனித இடைவேளை இன்றி பொதுமக்கள் காய்கறிகள் இறைச்சிகள் மதுவகைகள் வாங்கியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.