கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதை இந்தியாவிடம் கற்று கொள்ளுங்கள். வங்கதேச எழுத்தாளர்

கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதை இந்தியாவிடம் கற்று கொள்ளுங்கள். வங்கதேச எழுத்தாளர்

taslimaவங்கதேசத்தில் பிறந்து மேற்குவங்காளத்தில் வாழ்ந்து வந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கடந்த 2008ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். அவர் எழுதிய புத்தக்மான எஸ்லின் பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டாலும், இந்தியாவில் தான் தான் மீதியுள்ள காலத்தை கழிக்க விரும்புவதாகவும், கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றே அறியாத அண்டை நாடுகள் மத்தியில் இந்தியாவிடம் இருந்து அதன் அர்த்தத்தை மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 மிரட்டல்கள், தடைகள், கட்டுப்பாடுகள் ஆகிய தொல்லைகள் தனக்கு இந்தியாவில் இருந்தாலும், மீண்டும் இந்தியா திரும்பவே ஆசைப்படுவதாகவும், ஒரு நாள் சுதந்திரமான சிந்தனைக்கு இந்தியாவில் ஊக்கம் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்
 
 அல்கொய்தாவின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் இவர் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

Leave a Reply