பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டெகல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பாலை கோவா போலீசார் கடந்த 30 ஆம் தேதி கைது செய்தனர்.

அவரை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபு தேசாய் உத்தரவிட்டார். அதன்படி தருண் தேஜ்பால் பனாஜி சிறையில் கொலை கைதிகளுடன் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் தருண் தேஜ்பாலுக்கு மின் விசிறி வழங்க வேண்டும் என்று கோவா முதல் வகுப்பு நீதிமன்ற நீதிபதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதி ஷாமா ஜோஷி தள்ளுபடி செய்தார்.

Leave a Reply