TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும்: சூரப்பா

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் AUCET என தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என்றும் அவர் தெரிவித்தார்

முன்னதாக முதுகலை படிப்புகளில் சேர ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, ‘TANCET தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் AUCET என்ற தனி தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறினார்

Leave a Reply