shadow

தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையர் தகவல்

தமிழகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் இதில் ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி என்றும் பெண் வாக்காளர்கள் 3.15 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 8,027 பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்றும் வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 3310 என்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.