கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழக பள்ளிகளும் மூடப்படுகின்றன

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் தியேட்டர்கள், மால்கள் உள்பட பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்திலும் இந்த நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்த விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply